திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக மூன்றாவது முறை அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
அவரது மனைவியும் உதவியாளர்களும் உடன் செல்வார்கள் என்றும் எதிர்வரும் 23ஆம் தேதி அவர் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பினராயி விஜயனுக்கு எந்தவிதமான உடல்நலப் பிரச்சினை என்று வெளிப்படையாக அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

