தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரம்பரிய சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்பவர்களுக்குச் சிறப்பு விசா

1 mins read
161bbb66-82f0-419f-9371-3737988f5ee6
மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மோரி‌‌ஷஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் ஜிப்ரியிஸ். (படம்: இந்திய ஊடகம்) -

இந்தியப் பாரம்பரிய சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டினருக்கு சிறப்பு விசா வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஆயுர்வேதம், யோக, சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஹோமியோபதி, யுனானி மருத்துவம் ஆகிய ஆறு வகையான பாரம்பரிய சிகிச்கைகளுக்காக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்தச் சிறப்பு விசா வழங்கப்படும்.

குஜராத்தில் நடைபெற்ற அனைத்துலக ஆயு‌ஷ் மாநாட்டில் கலந்துகொண்ட திரு மோடி இவ்வாறு தெரிவித்தார். கிருமித் தொற்றுக் காலத்தில் பாரம்பரிய மருத்தவம் இந்தியர்களின் நோய் தடுப்புச் சக்தியை அதிகரித்தாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் ஜிப்ரியிஸ், பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த நீண்டகால முதலீடுகள் தேவை என கூறினார்.