புதுடெல்லி: ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன்டெர் லியென் இந்தியா வருகிறார்.
இம்மாதம் 24ஆம் தேதி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு அவர் இந்தியா வரவிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை உர்சுலா சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.
"இரு தரப்பு உறவு குறித்து விவாதிக்கப்படும்," என்று அமைச்சு மேலும் கூறியது.
இந்தப் பேச்சில் உக்ரேன் விவகாரமும் தலையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

