கொல்லம்: கேரளாவில் மணமேடையிலிருந்து மணப்ெபண் எழுந்து ஓடியதால் திருமண விருந்தினர்கள் அதிர்ச்சிஅடைந்தனர். கொல்லம் அருகே மண் துருத்தி பகுதியைச்சேர்ந்த வாலிபருக்கும் கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயித்து இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண நாளன்று மாப் பிள்ளையும் மணமகளும் மாலையை மாற்றிக் கொள்ளும்போது மாப்பிள்ளையைத் தடுத்து நிறுத்திய மணப்பெண், திடீரென மணமேடையில் இருந்து கீழே இறங்கி ஓடி ஒரு அறைக்குள் புகுந்து பூட்டிக்கொண்டார். அவர் வெளியே வராததால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் பெண்ணை வெளியே அழைத்து விசாரித்ததில் அவரது காதல் விவகாரம் தெரியவந்தது. தான் ஒருவரை காதலிப்பதாகவும் பெற்றோர் கட்டாயப் படுத்தியதால் இந்தத் திருமணத்துக்குச் சம்மதித்தாகவும் அவர் கூறினார். அதோடு மணப்பெண் பிடிவாதமாக திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதனால் மணமகன் வீட்டாருக்கு நஷ்டஈடு கொடுக்க பெண் வீட்டார் ஒப்புக் கொண்டனர்.
மணப்பெண் ஓட்டம்
1 mins read
-

