புதுடெல்லி: டெல்லியில் ஐ.என்.எஸ். ஏவுகணை தாங்கிக் கப்பலில் இருந்து பிரம்மோஸ் 'சூப்பர்சோனிக்' ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது. மேம்பட்ட மாடுலர் ஏவியைப் பயன் படுத்தி ஏவப்பட்ட 'சூப்பர்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சீறி பாய்ந்து இலக்கை அழித்தது. இதன் மூலம், பிரம்மோஸின் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன், முன்னணி தளங்களில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்புகளின் செயல்பாடுகள் மீண்டும் வெற்றிகரமாக நிரூபிக்கப் பட்டுள்ளதாக கடற்படை அறிக்கை தெரிவித்தது. நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரைத்தளங்களில் இருந்து பாய்ச்சும் வகையில் இந்தியா-ரஷ்ய கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
பிரம்மோஸ் ெவற்றி
1 mins read
-

