புதுடெல்லி: ரஷ்யா - உக்ரேன் போர் காரணமாக நிலக்கரி விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா (8 மில்லியன் டன்), தமிழ்நாடு (1.5 மில்லியன் டன்), குஜராத் (ஒரு மில்லியன் டன்) ஆகிய மூன்று மாநிலங்கள் 10.5 மில்லியன் டன் அளவில் நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளன.
இந்நிலையில் நிலக்கரியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

