பெங்களூர்: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தின் நாகேனஹள்ளியைச் சேர்ந்த இளைஞர் நரசிம்ம மூர்த்தி (26). இவர் நேற்றுமுன்தினம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வெங்கட ரமணப்பாவைச் சந்தித்து, நாகேனஹள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அவற்றைச் சரி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த எம்எல்ஏ வெங்கட ரமணப்பா, நரசிம்ம மூர்த்தியின் கன்னத்தில் பளார் என்று ஓர் அறை விட்டார். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ, இளைஞர் நரசிம்ம மூர்த்தி மரியாதைக் குறைவாகப் பேசியதால்தான் அவரை அறையும்படி நேரிட்டது. அதற்காக தாம் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.

