திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் முதன்முதலாக கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளையர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த தொற்று கொரோனா எக்ஸ்-இ வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கேரள சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கேரளாவில் எக்ஸ்-இ கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை சுகாதாரத்துறைமேற்கொண்டுள்ளது.
இந்தப் புதிய வகை தொற்று மேலும் பரவாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அம்மாநிலத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று சுகாதாரத் துறை பணியாளர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

