'தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது'

'தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது'

1 mins read
69f486d4-0f9c-4715-9068-5c7aa6e19bdb
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றிய பொருள்களை பாதுகாப்புப் படையினர் ஆராய்கின்றனர். படம்: இணையம் -

புது­டெல்லி: ஜம்­மு­வில் பாது­காப்­புப் படை­யி­னர் இரண்டு தீவி­ர­வா­தி­க­ளைச் சுட்­டுக் கொன்­ற­தால், மிகப்­பெ­ரிய தீவி­ர­வாத தாக்­கு­தல் முறி­ய­டிக்­கப்­பட்­ட­தாக அம்­மா­நில காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

தீவி­ர­வா­தி­க­ளின் உரை­யா­டலை இடை­ம­றித்­துக் கேட்ட உள­வுத்­துறை, பாது­காப்­புப் படை­யி­னர் அளித்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் இத­னைக் கூறி­யுள்­ளது.

தீவி­ர­வா­தி­கள் அணிந்­தி­ருந்த வெடி­குண்­டு­கள் நிரம்­பிய ஐஇடி பெல்ட் மூலம், அவர்­கள் தற்­கொலைப் படைத் தாக்­கு­தல் மூலம் மிகப்­பெ­ரிய தீவி­ர­வாத சதித் திட்­டத்தை தீட்­டி­யி­ருந்­தது கண்­டு­பிடிக்கப்­பட்­டுள்­ள­தோடு, அந்த வெடி­குண்­டு­கள் மிக­வும் அபா­ய­க­ர­மா­ன­தாக இருந்­த­தும் தெரிய வந்து உள்­ளது.

தீவி­ர­வா­தி­கள் பதுங்­கி­யி­ருந்த இடத்­தி­லி­ருந்து ஏரா­ள­மான வெடி­பொ­ருள்­களும் வெடி­குண்டு பெல்ட்டு­களும் கைப்­பற்­றப்­பட்­டன.

தீவி­ர­வா­தி­கள், பிர­த­ம­ரின் ஜம்மு காஷ்­மீர் பய­ணத்­தில் நாச­வே­லைக்­குச் சதி திட்­டம் தீட்­டி­யி­ருக்­க­லாம் அல்­லது சஞ்சு­வான் ராணுவ முகாம் மீது தாக்­கு­தல் நடத்த திட்­ட­மிட்­டி­ருக்­க­லாம் என ஜம்மு காஷ்­மீர் போலிஸ் அதிகாரி தில்­பாக் சிங் கூறி­யுள்­ளார். ஜம்­மு­வின் சஞ்­சு­வான் ராணுவ முகாம் அருகே பாது­காப்­புப் படை­யி­ன­ரு­டன் வெள்­ளிக்­கி­ழமை ஏற்­பட்ட மோத­லில் ஜெய்ஷ்-இ-முக­மது தீவி­ர­வா­தி­கள் இருவா் கொல்­லப்­பட்­டனா்.