தொற்று காரணமாக ஒரே நாளில் 33 பேர் மரணம்

தொற்று காரணமாக ஒரே நாளில் 33 பேர் மரணம்

1 mins read
a96b9ebd-3230-41ee-9d93-9fee0f0533de
-

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது, தொற்றின் 4வது அலை தொடங்கிவிட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் நேற்று 2,527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துவிட்டனர்.

கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,079ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 0.56 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய அரசு சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்ற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.