சிறுமி உட்பட குடும்பத்தில் ஐவர் கொலை

சிறுமி உட்பட குடும்பத்தில் ஐவர் கொலை

1 mins read
6e891bf1-8566-42d5-9c76-669d86d4de7e
-

பிரக்­யாக்­ராஜ்: இரண்டு வயது சிறுமி உட்­பட ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த 5 பேர் அடித்­துக் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் நடந்­துள்­ளது.

ராம்­கு­மார் யாதவ், 55, அவ­ரது மனைவி குசும் தேவி, 52, மகள் மணீஷா, 25, மரு­ம­கள் சவீதா, 27, ராம்­கு­மா­ரின் பேத்தி மீனாட்சி, 2 ஆகியோர் தீ வைத்து எரிக்­கப்­பட்­ட­னர். ராம்­கு­மா­ரின் மற்­றொரு பேத்­தி­யான சாக்‌ஷி என்ற 5 வயது குழந்தை இதி­லி­ருந்து அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர் தப்­பி­யுள்­ளாள். மேலும் ராம்­கு­மா­ரின் மகன் சுனில் வீட்­டில் இல்­லா­த­தால் அவ­ரும் தப்­பித்­துள்­ளார்.

மாண்­ட­வர்­க­ளின் உட­லில் காயங்­கள் உள்­ள­தால், அடித்துக் கொலை செய்­து­விட்டு பின் வீட்டிற்கு நெருப்பு வைக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என காவல்­து­றை­யி­னர் சந்­தே­கிக்­கின்­ற­னர். இந்த கொலைக்கு கார­ணம் குறித்து பல்­வேறு கோணங்­களில் விசா­ர­ணையை மேற்­கொள்ள ஏழு குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.