லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தங்களுக்குப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 24 மாணவிகளை மொட்டை மாடியில் பூட்டி வைத்தனர்.
அதன்பின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மாணவிகளை மீட்டனர்.
சென்ற வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து லக்கிம்பூர் கேரியின் கல்வி அதிகாரி லக்ஷ்மிகாந்த் பாண்டே, "ஆசிரியர்கள்மீது ஏற்கெனவே பல்வேறு புகார்கள் உள்ளதால் ஒழுங்கு நடவடிக்கையாகவே இருவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். ஆனால், அதை ரத்து செய்ய அழுத்தம் தரும் வகையில் அவர்கள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டனர்," என்றார். மனோரமா மிஸ்ரா, கோல்டி கட்டியார் என்ற அந்த ஆசிரியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

