பாலியல் வன்புணர்வு: மூவர் கைது

பாலியல் வன்புணர்வு: மூவர் கைது

1 mins read
024cb12e-18c5-4bef-9a98-5efefc23b995
-

விஜ­ய­வாடா: மன­வ­ளர்ச்சி குன்றிய பெண்ணை ஏமாற்றி அழைத்­துச் சென்று, பாலி­யல் வன்­பு­ணர்வு செய்த மூவர் கைது செய்­யப்­பட்­டனர்.

ஆந்­தி­ரா­வின் விஜ­யவாடாவை சேர்ந்த 23 வயது மன­வ­ளர்ச்சி குன்­றிய பெண், கடந்த 19ஆம் தேதி காணா­மல் போனார். இது குறித்து, காவல்­து­றை­யினர் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை.

இந்­நி­லை­யில், பெற்­றோ­ரின் கைபே­சிக்கு ஏற்­கப்­ப­டாத அழைப்பு ஒன்று வந்­தது. அது மருத்­து­வ­மனை­யில் பணி­பு­ரி­யும் ஸ்ரீகாந்த் என்­ப­வ­ரு­டை­யது என்­பது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

இருப்­பி­னும் போலி­சார் மந்­த­மாக செயல்­பட்ட நிலை­யில், விஜ­ய­வாடா பழைய அரசு பொது மருத்து­வ­ம­னை­யின் அறை­யில் அடைக்கப்பட்டிருந்த தங்­க­ளது மக­ளைப் பெற்­றோரே கடந்த 20ஆம் தேதி மீட்­ட­னர்.

தொடர்ந்து, அப்­பெண்­ணைப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்த ஸ்ரீகாந்த், பவன் கல்­யாண், பாபு­ராவ் ஆகி­யோர் கைதா­கி­னர்.