இந்தியா சீனக் குடிமக்களுக்கு வழங்கும் சுற்றுப்பயண விசா அனுமதி தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் அதில் உறுப்பினர்களாக உள்ள விமான நிறுவனங்களிடம் இதைத் தெரிவித்தது.
சீனா தனது பல்கலைக்கழகங்களில் படிக்கும் 22,000 இந்திய மாணவர்களை மீண்டும் திரும்ப அனுமதிக்காததற்குப் பதில் நடவடிக்கையாக இந்தியா அந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் தொடங்கியதும், அந்த மாணவர்கள் நாடு திரும்பும் கட்டாயம் ஏற்பட்டது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் எல்லைகளைத் திறக்காத சீனா, பல்கலைக்கழகங்களுக்குத் திரும்ப அந்த மாணவர்களை அனுமதிக்கவில்லை.
ஆனால் தாய்லந்து பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் சீனா திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுப்பயண விசா அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோதும் வர்த்தகம், வேலை, அரசதந்திர விசாக்களை இந்தியா சீனக் குடிமக்களுக்குத் தொடர்ந்து வழங்கும்.
இவ்வேளையில், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாட்டவர்களைத் தவிர பிறநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு வழங்கப்படும் 10 ஆண்டு விசா அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் கூறியது.

