கண் இமைக்கும் நேரத்தில் பாதாளச் சாக்கடைக்குள் விழுந்த பெண் (காணொளி)

கண் இமைக்கும் நேரத்தில் பாதாளச் சாக்கடைக்குள் விழுந்த பெண் (காணொளி)

1 mins read
2dfbf092-4a1b-4c05-b33f-7c55652f2a2a
-

பெண் ஒருவர் தவறி திறந்த பாதளச் சாக்கடைக்குள் விழுந்துள்ளார். நல்ல வேளையாக அருகில் இருந்தோரின் உதவியால் அவர் காப்பாற்றப்பட்டார்.

பிகாரின் பாட்னா நகரில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அருகில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது.

அந்தக் காணொளியில் ஒரு பெண்மனி ஆட்டோரிக்‌‌‌ஷா பின்னால் நடந்து செல்கிறர். கையில் கைபேசி ஒன்றில் பேசிக்கொண்டே செல்லும் அவர் முன்னால் சென்ற ஆட்டோவின் கீழே பாதாளச் சாக்கடை ஒன்று இருப்பதைக் கவனிக்கவில்லை.

கண் இமைக்கும் நேரத்தில் அவர் திறந்திருந்த பாதாளச் சாக்கடைக்குள் விழுந்துவிடுகிறார். நல்ல வேளையால உடனே அங்கிருந்து பொதுமக்கள் பலர் அவரை பாதாளச்சாக்கடைக்குள் இருந்து வெளியே தூக்கிவிடுகின்றனர்.