மங்களூரு: "கல்விக்கும் கற்றலுக்கும் வயது ஒரு தடையல்ல," என்பதை நிரூபிக்கும்விதமாக கர்நாடகா மாநிலம், மங்களூரு பல்கலைக்கழகத்தில் உஷா என்ற 75 வயதுப் பெண் (படம்) தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
மங்களூரைச் சேர்ந்தவரான உஷா சட்காவின் இரு பேரப் பிள்ளைகளும் தற்போது கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர், உடுப்பி மாவட்டத்தின் சந்தானா பப்ளிக் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்து நேற்று முன்தினம் டாக்டர் பட்டம் பெற்றார்.

