காஷ்மீரில் ரூ.3,100 கோடி செலவில் இருவழி குகைப் பாதை திறப்பு ரூ.20,000 கோடி திட்டம்: பிரதமர் மோடி அடிக்கல்

காஷ்மீரில் ரூ.3,100 கோடி செலவில் இருவழி குகைப் பாதை திறப்பு ரூ.20,000 கோடி திட்டம்: பிரதமர் மோடி அடிக்கல்

2 mins read
8ed1c792-20c1-4629-9eca-e1e93b918a3c
-

ஸ்ரீந­கர்: ஜம்மு-காஷ்­மீ­ருக்­கான சிறப்பு அந்­தஸ்து ரத்து செய்­யப்­பட்ட பிறகு முதல்­மு­றை­யாக நேற்று பிர­த­மர் நரேந்­திர மோடி அங்கு சென்­றி­ருந்­தார்.

அவ­ரது பய­ணத்­தை­யொட்டி உள்­ளூர் காவல்­து­றை­யி­ன­ரும் துப்­பாக்கி ஏந்­திய ராணு­வத்­தி­ன­ரும் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப் பட்­டி­ருந்­த­னர்.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக வாக­னச் சோத­னை­களும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இப்­ப­ய­ணத்­தின்­போது ரூ.20,000 கோடி மதிப்­பி­லான புதிய திட்­டங்­களுக்கு அடிக்­கல் நாட்­டி­ய­தோடு, நிறை­வ­டைந்த திட்­டங்­க­ளை­யும் பிர­த­மர் தொடங்கி வைத்­தார்.

அத்­து­டன், ரூ.3,100 கோடி செல­வில் ஜம்மு-காஷ்மீா் பகு­தி­க­ளுக்கு இடை­யே­யான பயண நேரத்தை வெகு­வா­கக் குறைக்­கும் வகை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள 16 கி.மீ. தொலை­வி­லான பனி­ஹால்-குவா­சி­கண்ட் இரு­வழி சுரங்­கப் பாதை­களை­யும் மக்­கள் பயன்­பாட்­டுக்­குப் பிர­த­மர் தொடங்கிவைத்­தார்.

இங்­குள்ள பள்­ளிக் கிரா­மத்­தில் நடை­பெ­றும் பஞ்­சா­யத்து ராஜ் திரு­வி­ழா­வி­லும் அவர் பங்­கேற்­றார்.

இவ்­வி­ழாவை ஒட்டி விவ­சாயி களுக்­கான அறி­வி­யல் தொழில்நுட்­பக் கண்­காட்­சி­யும் நடத்­தப்­பட்­டது.

அதன்பின்னா், ஜம்­மு­வின் சம்பா மாவட்­டம், பாலி கிரா­மத்­துக்­குச் சென்ற பிர­தமா், அங்கு அமைக்­கப்­பட்­டி­ருந்த 500 கிலோ வாட் சூரிய சக்தி மின் உற்­பத்தி நிலை­யத்தைத் தொடங்கி­வைத்தாா்.

இதைத்­தொ­டர்ந்து கிஷ்த்­வார் மாவட்­டத்­தில் உள்ள சேனாப் ஆற்­றின் குறுக்கே அமைக்­கப்­பட உள்ள ரட்லே, குவார் ஆகிய நீர்­மின் திட்­டங்­க­ளுக்­கும் பிர­த­மர் மோடி அடிக்­கல் நாட்­டி­னார்.

பின்னா், அங்­கி­ருந்து மும்­பைக்குச் சென்ற பிர­தமா், அங்கு லதா தீனா­நாத் மங்­கேஷ்கா் விருது வழங்­கும் விழா­வில் பங்­கேற்­றார்.

இது­கு­றித்து பிரதமர் மோடி தனது டுவிட்­டர் பதி­வில், "மும்­பை­யில் முதல் நபராக லதா மங்­கேஷ்­கர் விரு­தைப் பெறவிருக்­கி­றேன். இந்­தக் கௌர­வத்­தை நான் நன்­றி­யு­ட­னும் பணி­வு­ட­னும் ஏற்­றுக்கொள்­கி­றேன். அவர் எப்­போ­தும் வலு­வான, வள­மான இந்­தி­யா­வைக் கனவு கண்­டார். தேசத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தில் பங்­களித்­தார்," எனக் குறிப்­பிட்­டுள்ளார்.