பார்வையற்ற சகோதரர்கள் வடிவமைத்த 29 அடி உயர கோவில் தேர்

பார்வையற்ற சகோதரர்கள் வடிவமைத்த 29 அடி உயர கோவில் தேர்

2 mins read
b9b52ab4-f1fd-45dd-934a-a1bccf5fd6ee
இதுதான் பார்வையற்ற இரு சகோதரர்களும் வடிவமைத்த தேர். தங்கள் தாயாரிடம் பல்வேறு ஆலோசனைகளைப் பெற்று இதை உருவாக்கியதாக இருவரும் கூறுகின்றனர். தந்தையைப் போல் சிறப்பாக வடிவமைத் துள்ளதாக பொது மக்கள் பாராட்டு கின்றனர். படம்: ஊடகம் -

பெங்­க­ளூரு: பார்­வை­யற்ற சகோ­தரர்­கள் 29 அடி உயர தேரை வடி­வ­மைத்து வியக்க வைத்­துள்­ள­னர்.

கர்­நா­ட­கா­வின் பாகல்­கோட்டை பகு­தி­யைச் சேர்ந்­த­வர் மல்­லப்பா.

கோவில் தேர்­களை வடி­வ­மைப்­ப­தில் கைதேர்ந்­த­வ­ரான அவர், ஏரா­ள­மான கோவில்­க­ளுக்கு தேர்­களை வடி­வ­மைத்­துள்­ளார்.

கர்­நா­டக அரசு இவ­ருக்கு விருது வழங்கி கௌர­வித்­துள்­ளது. மேலும் பல அமைப்­பு­க­ளின் விரு­து­க­ளை­யும் பெற்­ற­வர் மல்­லப்பா.

கொப்­பல் மாவட்­டம், குஷ்­டகி பகு­தி­யில் உள்­ளது மாரு­தேஸ்­வரா கோவில்.

இக்­கோ­வி­லுக்­குப் புதிய தேர் ஒன்றை வடி­வ­மைத்து கொடுக்­கு­மாறு அப்­ப­குதி மக்­கள் சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் மல்­லப்­பாவை கேட்­டுக்கொண்­ட­னர். அதை ஏற்று கடந்த 2018ஆம் ஆண்டு பணி­யைத் தொடங்­கி­னார் மல்­லப்பா.

எனி­னும் எதிர்­பா­ரா­த­வி­த­மாக உடல்­ந­லக் குறைவு ஏற்­பட்டு அவர் கால­மா­னார்.

தேர் வடி­வ­மைப்­புப் பணி பாதிக்­கப்­பட்­ட­தால் ஊர் மக்­கள் வருத்­தம் அடைந்­த­னர்.

இந்­நி­லை­யில், திடீர் திருப்­ப­தாக மல்­லப்­பா­வின் பார்­வை­யற்ற இரு மகன்­களும் தந்தை விட்­டுச் சென்ற பணியை தாங்­கள் முடித்­துக் கொடுப்­ப­தாக உறுதி அளித்­த­னர்.

இவர்­க­ளால் எப்­படி தேரை உரு­வாக்க முடி­யும் என்ற சந்­தே­கம் எழுந்­தா­லும், ஊர் மக்­கள் முழு­ம­ன­து­டன் அதற்கு ஒப்­புக்­கொண்­ட­னர்.

இதை­ய­டுத்து, தேர் வடி­வ­மைப்பு தொடர்­பாக தங்­கள் தந்தை சொல்­லிக்­கொ­டுத்­ததை வைத்து மல்­லப்­பா­வின் இரு பார்­வை­யற்ற மகன்­களும் பணி­யைத் தொடங்­கி­னர்.

இன்­னொரு சிற்பி அவர்­க­ளுக்கு உதவ, 29 அடி உயர தேரை கச்­சி­த­மாக உரு­வாக்கி, கிராம மக்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­துள்­ள­னர்.

கடந்த 15ஆம் தேதி மாரு­தேஸ்­வரா கோவில் திரு­விழா நடை­பெற்­றது. அப்­போது புதிய தேரில்­தான் சாமி பவனி நடை­பெற்­றது.

பார்­வை­யற்ற சகோ­த­ரர்­க­ளின் திற­மையைப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் பாராட்டி வரு­கின்­ற­னர்.