புதுடெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரி சம்பவம் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டின் ஒட்டுமொத்த அடையாளம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற புதிய உத்தியின் மூலம் முஸ்லிம்கள், ஏழைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அறவே ஏற்க இயலாது என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

