சிறுபான்மையினருக்கு எதிரான நாடு: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

சிறுபான்மையினருக்கு எதிரான நாடு: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

2 mins read
0df6a571-63fc-40e2-a0dd-fbe79d05499c
-

"இந்தியா மீது முத்திரை குத்தப்பட்டால் இந்தியப் பொருள்களின் சந்தை பாதிக்கப்படும்"

புது­டெல்லி: சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான நாடு என்று இந்­தியா மீது ­முத்­திரை குத்­தப்­பட்­டால் அனைத்­து­லக அள­வில் இந்­தி­யப் பொருள்­க­ளின் சந்தை கடு­மையான பாதிப்பைச் சந்­திக்க நேரி­டும் என்று ரிசர்வ் வங்கி முன்­னாள் ஆளு­நர் ரகு­ராம் ராஜன் எச்­ச­ரித்­துள்­ளார்.

டெல்­லி­யில் நேற்று நடை­பெற்ற பொரு­ளா­தார மாநாட்­டில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்துகொண்டு பேசிய அவர், இந்­தியா ஒரு ஜன­நாயக நாடாக பார்க்­கப்­பட வேண்­டு­ம் எனில், அனைத்து குடி­மக்­க­ளை­யும் ஒரே மாதி­ரி­யாக நடத்த வேண்­டும் என்­றார்.

அனை­வ­ரும் மரி­யா­தை­யு­டன் வாழ்­வதை உறுதி செய்­தால், அனைவ­ரை­யும் அனு­ச­ரித்துச் செல்­லும் கருணைமிக்க நாடாக இந்­தி­யா­வின் பெயர் விளங்­கும் என்­றும் ரகு­ராம் ராஜன் தெரி­வித்­தார்.

"அவ்­வாறு பெய­ரெ­டுப்­பது இந்தியா­வின் பொரு­ளா­தா­ரத்­துக்­கும் நல்­லது. ஏனெ­னில், வெளி­நாட்டு வாடிக்­கை­யா­ளர்­கள் பொது­வாக ஒரு நாட்­டின் பொருள்­களை வாங்­கும்­போது அதன் (நாட்­டின்) குண­ந­லன்­களைப் பார்ப்­பார்­கள்.

"'இந்த நாடு இத்­த­கைய சிறப்பு பண்­பு­களைக் கொண்­டிருக்கிறது. எனவே இந்த நாட்­டின் பொருள்களை வாங்­கு­வ­தில் தவறில்லை' என்ற மனப்­பான்மை தான் வெளி­நாட்டு வாடிக்­கை­யாளர்­களுக்கு இருக்­கும்," என்­றார் ரகு­ராம்.

சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான நாடு என்ற முத்­திரை சந்­தையை மட்­டு­மல்­லா­மல், வெளி­நா­டு­களு­டனான உற­வி­லும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்று குறிப்­பிட்ட அவர்,

வெளி­நாட்டு அர­சாங்­கங்­கள் ஒரு நாட்டை இரண்டு வித­மாக பார்ப்­ப­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

"ஒன்று, இந்த நாடு நமக்கு நம்பக­மான கூட்­டாளி என்ற பார்வை. இரண்­டா­வது, அந்த நாடு எவ்­வாறு சிறு­பான்­மை­யி­னர்­களை நடத்­து­கிறது என்ற பார்வை.

"ஆகவே, இந்­தியா இந்த விஷ­யத்­தில் கவ­ன­மாக இருக்க வேண்­டும். உய்­கர் முஸ்­லிம்­களுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­யால் தான் சீனா­வின் வெளி­நாட்டுச் சந்தை அடி­வாங்­கி­யது," என்­றார் ரகு­ராம் ராஜன்.

ஜன­நா­ய­கத்­துக்கு மதிப்பு கொடுத்­த­தால் உக்­ரே­னின் சந்தை மதிப்பு சிறப்­பாக இருந்­தது என்­றும் அவர் மேலும் குறிப்­பிட்­டார்.

இந்தியாவில் சிறுபான்மையினர் பாரபட்சமாக நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பி வருகின்றன. இத்தகைய போக்கை பாஜக கைவிட வேண்டும் என்றும் சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.