திருச்சூர் பூரம் விழாவுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

1 mins read
02b4421d-4094-45c3-a9a0-44b32b7b254e
-

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் புகழ்­பெற்ற திருச்­சூர் பூரம் விழா எதிர்­வரும் மே 10ஆம் தேதி கொண்­டா­டப்­பட உள்­ளது.

இந்­நி­லை­யில் அந்த விழா­வுக்­கான கட்­டுப்­பா­டு­கள் அனைத்­தும் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக அம்­மா­நில அரசு அறி­வித்­துள்­ளது.

மேலும், விழா­வை­யொட்டி வாண வேடிக்கை நிகழ்வை நடத்­த­வும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தால் பக்­தர்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

திருச்­சூர் வடக்கு நாதன் கோவி­லில் நடை­பெ­றும் திருச்­சூர் பூரம் திரு­விழா உல­க­ள­வில் பெயர் பெற்ற ஒன்று. இந்த விழா­வில் உள்­நாட்­டில் இருந்து மட்­டு­மல்­லா­மல், பல்­வேறு நா­டு­களில் இருந்­தும் ஏரா­ள­மான பக்­தர்­கள் பங்­கேற்­பது வழக்­கம்.

யானை­கள் அணி­வ­குப்­பும் வாண வேடிக்­கை­யும் இந்­தத் திரு­வி­ழா­வின் சிறப்பு அம்­சங்­க­ளா­கும்.

கொரோனா நெருக்­கடி கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக திருச்­சூர் பூரம் விழா­வுக்­குப் பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன. இத­னால் பக்­தர்­கள் சோகத்­தில் இருந்­த­னர்.

தற்­போது தொற்­றுப்­ப­ர­வல் கட்­டுக்­குள் வந்­துள்­ளதை அடுத்து, அனைத்து கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்டு, பழை­ய­படி திரு­விழா விம­ரி­சை­யாக நடை­பெற உள்­ளது.

எனி­னும் பக்­தர்­கள் அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணிந்து விழாவில் பங்­கேற்க வேண்­டும் என அம்­மாநில அரசு அறிவு­றுத்தி உள்­ளது.