கர்நாடகாவில் தொற்று அதிகரிப்பு; மீண்டும் கட்டுப்பாடுகள்

கர்நாடகாவில் தொற்று அதிகரிப்பு; மீண்டும் கட்டுப்பாடுகள்

2 mins read
085d6954-7769-41b7-bff1-303795d045a4
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் கொரோனா பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது.

ஹரி­யானா, மகா­ராஷ்­டிரா, டெல்லி, பஞ்­சாப் உள்­ளிட்ட சில மாநி­லங்­களில் தொற்­றுப் பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது. இதன் கார­ண­மாக கொரோனா தொற்­றின் நான்­கா­வது அலை பர­வத் தொடங்கி விட்­ட­தா­க­வும் கரு­தப்­படு­கிறது.

கர்­நா­டக மாநி­லத்­தின் தலை­ந­க­ரான பெங்­க­ளூ­ரில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.

கர்­நா­ட­கா­வில் நான்­கா­வது அலை உரு­வெ­டுப்­ப­தைத் தடுக்­கும் வகை­யில் மீண்­டும் தொற்­றுக் கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து அம்­மா­நில முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை தலை­மை­யில் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடத்­தப்­பட்­டது.

இந்த ஆலோ­சனைக் கூட்­டத்­தில் கர்­நா­ட­கத்­தில் அனை­வ­ரும் கண்­டிப்­பாக முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என்று முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பொது இடங்­க­ளான ரயில், பேருந்து நிலை­யங்­கள், பொது­மக்­கள் அதி­கம் கூடும் பகு­தி­களில் கண்­டிப்­பாக முகக்­க­வ­சம் அணிய வேண்­டும். முகக்­க­வ­சம் அணி­வ­து­டன், சமூக இடை­வெ­ளியை கடைப்­பி­டிப்­ப­தும் கட்­டா­ய­மா­கும். முகக்­க­வ­சம் அணி­வது, சமூக இடை­வெ­ளியை கடைப்­பி­டிப்­ப­தில் மக்­கள் அலட்­சி­ய­மாக இருக்க வேண்­டாம் என்று கர்­நா­டக சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் சுதா­கர், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில் நாடு முழு­தும் கடந்த 24 மணி நேரத்­தில் 2,483 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

தொற்­றுப் பாதிப்­புக்கு ஆளாகி சிகிச்சை பெறு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 15,636 ஆக உள்­ள­தாக மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­கம் தெரி­வித்து இருக்­கிறது.

இதன் கார­ண­மாக முகக் கவ­சம், சமூக இடை­வெளி போன்ற தொற்று தடுப்பு நட­வ­டிக்­கை­கள் பல மாநி­லங்­களில் மீண்­டும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில் கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது தொடர்­பாக அனைத்து மாநில முதல்­வர்­க­ளு­ட­னும் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி இன்று காணொளி வழி ஆலோ­சனை நடத்­து­வார் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நண்­ப­கல் 12 மணிக்கு நடை­பெ­றும் இந்­தக் கூட்­டத்­தில் தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், ஆந்­திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி, கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை, மேற்கு ­வங்­காள முதல்­வர் மம்தா பானர்ஜி உள்­ளிட்­டோர் பங்­கேற்க இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.