சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள மானேசர் பகுதியில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் திங்கள் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் மாண்டனர்.
தீ மளமளவென பரவி, காட்டுத்தீப்போல் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கொழுந்துவிட்டு எரிந்தது. 35 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

