ஒடிசாவில் வெப்பம்: பள்ளிகளுக்கு விடுமுறை

ஒடிசாவில் வெப்பம்: பள்ளிகளுக்கு விடுமுறை

1 mins read
6a17d4df-26f7-4792-bccf-65f6bbcd502a
-

புவ­னேஸ்­வ­ரம்: ஒடிசா மாநி­லத்­தில் கடு­மை­யான வெயில் மற்­றும் வெப்­பம் கார­ண­மாக அங்­குள்ள பள்­ளி­கள் அனைத்­துக்­கும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விடு­முறை என்று அம்­மா­நில கல்­வித்­துறை அறி­வித்­துள்­ளது.

அதே­வே­ளை­யில், ஏற்­கெனவே அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்­தேர்­வு­கள் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி மே 31 வரை திட்டமிட்ட தேதிகளில் நடைபெறும். முன்­ன­தாக, ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை கோடை விடு­முறை அறி­விக்கப்பட்டிருந்தது குறிப்­பி­டத்­தக்­கது.