பிரதமரை விமர்சித்த விவகாரம்: பிணை கிடைத்தும் கைதான எம்.எல்.ஏ ஜிக்னேஷ்

பிரதமரை விமர்சித்த விவகாரம்: பிணை கிடைத்தும் கைதான எம்.எல்.ஏ ஜிக்னேஷ்

1 mins read
68068709-d0d9-44fa-8c5d-99e126c193d0
-

கவுகாத்தி: பிர­த­மர் நரேந்­திர மோடியை விமர்­சித்த 'டுவிட் பதிவு' வழக்­கில் குஜ­ராத் சுயேட்சை எம்­எல்ஏ ஜிக்­னேஷ் மேவா­னி­யின்(படம்) பிணை மனு மீதான தீர்ப்பில் அசாம் நீதி­மன்­றம் நேற்று அவ­ருக்குப் பிணை வழங்கி உத்­த­ர­விட்­டது.

இந்த நிலை­யில் ஜிக்­னேஷ் மேவா­னியைக் கைது செய்ய வந்த அசா­மின் பர்­பேட்­டா­வைச் சேர்ந்த காவல்துறையினர், அவர் எந்த வழக்­கில் மீண்­டும் கைது செய்­யப்­பட்­டார் என்­பதை இது­வரை தெரி­விக்­க­வில்லை.

அசா­மின் கோக்­ர­ஜ­ரைச் சேர்ந்த உள்­ளூர் பாஜக தலை­வர் ஒரு­வர் ஜிக்­னேஷ் மேவா­னிக்கு எதி­ராக புகார் அளித்­ததை அடுத்து, குஜ­ராத்­தின் பலன்­பூ­ரில் அசாம் காவல்­துறை முத­லில் அவரை கைது செய்­தது.

இது தொடர்­பாக பேசிய ஜிக்­னேஷ் மேவானி, "இது பாஜக மற்­றும் ஆர்­எஸ்­எஸ்­ஸின் சதி. எனது நற்­பெ­ய­ருக்கு களங்­கம் விளை­விப்­ப­தற்­காக இதை திட்­ட­மிட்­டுச் செய்து வரு­கின்­ற­னர். ரோகித் வெமு­லா­வுக்­குச் செய்­தார்­கள், சந்­தி­ர­சே­கர் ஆசாத்­துக்­குச் செய்­தார்­கள், இப்­போது என்­னைக் குறி­வைக்­கி­றார்­கள்," என்று கூறி­னார். ஜிக்­னேஷ் மீது சதி, வழி­பாட்­டுத் தலங்­கள் தொடர்­பான குற்­றம், சமய உணர்­வு­க­ளைத் தூண்­டு­தல் மற்­றும் அமை­திக்கு குந்­த­கம் விளை­வித்தல் ஆகிய பிரி­வு­க­ளின் கீழ் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.