வெறுப்பு அர­சி­ய­லுக்கு முடி­வு­: பிர­த­மருக்கு முன்­னாள் அரசு அதி­கா­ரி­கள் கடிதம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நிகழ்ந்த அண்­மைய இன வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைச் சுட்­டிக்­காட்டி, அதி­க­ரித்து வரும் வெறுப்பு அர­சி­ய­லுக்கு முடி­வு­கட்­டும்­படி பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு நூற்­றுக்கு மேற்­பட்ட முன்­னாள் அரசு உய­ர­தி­கா­ரி­கள் கடி­தம் எழு­தி­யுள்­ள­னர்.

முன்­னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் சிவ­சங்­கர் மேனன், முன்­னாள் வெளி­யு­ற­வுத்­து­றைச் செய­லா­ளர் சுஜாதா சிங், முன்­னாள் உள்­து­றைச் செய­லா­ளர் ஜி.கே.பிள்ளை, டெல்லி முன்­னாள் ஆளு­நர் நஜீப் ஜங், முன்­னாள் பிர­த­மர் மன்­மோ­கன் சிங்­கின் தனிச் செய­லா­ளர் டி.கே.ஏ.நாயர் உட்பட 108 பேர் அக்­க­டி­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்.

தங்­க­ளது கடி­தத்­தில் நாட்­டின் இப்­போ­தைய அர­சி­யல் சூழல் குறித்­தும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக இடம்­பெ­றும் வன்­மு­றை­கள் குறித்­தும் அவர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

"கடந்த சில ஆண்­டு­க­ளாக டெல்­லி­யி­லும் அசாம், குஜ­ராத், ஹரி­யானா, கர்­நா­ட­கம், மத்­திய பிர­தே­சம், உத்­த­ரா­கண்ட், உத்­த­ரப் பிர­தே­சம் ஆகிய பாஜக ஆளும் மாநி­லங்­க­ளி­லும் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு, குறிப்­பாக முஸ்­லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­கள் அதி­க­ரித்­தி­ருப்­பது அச்­சு­றுத்­த­லின் புதிய பரி­மா­ண­மாக இருக்­கிறது. இத்­த­கைய மிகப் பெரிய சமூக அச்­சு­றுத்­த­லுக்கு இடை­யில், தங்­க­ளின் மௌனம் எங்­க­ளைச் செவி­டாக்­கு­வ­தாக உள்­ளது," என்று அவர்­கள் தங்­கள் கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

"முன்­னாள் அரசு அதி­கா­ரி­களாக இது­போன்ற கடு­மை­யான விமர்­ச­னங்­களை நாங்­கள் வழக்­க­மாக முன்­வைப்­ப­தில்லை. ஆனால், நம் முன்­னோர்­கள் உரு­வாக்­கித் தந்த அர­சி­ய­ல­மைப்­பின் மாண்பு அழிக்­கப்­படும் வேகத்­தின் கார­ண­மாக நாங்­க­ளாக முன்­வந்து பேசும், எங்­கள் கோபத்தை வெளிப்­ப­டுத்­தும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளோம்," என்று அவர்­கள் கூறி­யுள்­ளனர்.

'அனை­வ­ரு­ட­னும், அனை­வ­ருக்­கு­மான வளர்ச்சி, அனை­வ­ருக்­கு­மான நம்­பிக்கை' என்ற தமது உறுதி­மொ­ழிப்­படி, உளச்­சான்­று­டன் பிர­த­மர் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று அவர்­கள் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!