டெல்லியின் வடபகுதியில் உள்ள பல்ஸ்வா குப்பை நிரப்புமிடத்தில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென தீப்பற்றியது. கட்டுக்கு அடங்காது எரிந்த தீயை அணைக்க 13 தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன. சம்பவம் தொடர்பில் 24 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிற்குச் சுகாதார அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டார். டெல்லியில் குப்பை நிரப்புமிடத்தில் தீ விபத்து நிகழ்ந்தது இவ்வாண்டில் இது நான்காவது முறை. இதற்குமுன் கிழக்கிலுள்ள காஸிப்பூர் குப்பை நிரப்புமிடத்தில் மும்முறை தீ விபத்து நிகழ்ந்தது. கடந்த மாதம் 28ஆம் தேதி அங்கு கொழுந்துவிட்டெரிந்த தீயை அணைக்க 50 மணி நேரத்திற்கு மேல் ஆனது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நேற்று முன்தினம் மேலும் மூன்று இடங்களில் தீச்சம்பவங்கள் பதிவாயின.
படம்: ராய்ட்டர்ஸ்

