தூக்கியபோது கைநழுவியதால் கீழே விழுந்து இறந்த குழந்தை

தூக்கியபோது கைநழுவியதால் கீழே விழுந்து இறந்த குழந்தை

1 mins read
333c1efc-58b8-48cc-8dc9-ff7730d7af90
-

லக்னோ: தாதி­யின் கையில் இருந்து தவறி விழுந்து பிறந்த குழந்தை இறந்த சம்­ப­வம் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத் தலை­ந­கர் லக்­னோ­வில் நிகழ்ந்­தது.

துணி­யில் சுற்­றா­மல் குழந்­தை­யைத் தூக்­கி­ய­தால் தாதி­யின் கையில் இருந்து அந்த ஆண் குழந்தை நழுவி, கீழே விழுந்­து­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னைக் கண்ட அக்­கு­ழந்­தை­யின் தாய் அல­றி­னார். அச்­சத்­தம் கேட்டு அவ­ரின் குடும்­பத்­தினர் பிர­சவ அறைக்­குள் சென்­ற­னர்.

அப்­போது, நல­மு­டன் குழந்­தையை ஈன்­றெ­டுத்­த­தா­க­வும் அதனை ஒரு கையால் தாதி தூக்­கி­ய­போது அது கீழே விழுந்து இறந்­து­விட்­ட­தா­க­வும் அப்­பெண் அவர்­க­ளி­டம் விவ­ரித்­தார்.

ஆனால், குழந்தை இறந்தே பிறந்­த­தா­கக் கூறி, நடந்­ததை மறைக்க முயல்­வ­தாக மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­தின்­மீது அந்தக் கு­ழந்­தை­யின் குடும்­பத்­தி­னர் குற்­றம் சாட்­டி­னர்.

இதன் தொடர்­பில் காவல்­துறை­யில் புகார் அளிக்­கப்­பட்­டது. அதன்­பின் குழந்­தை­யின் உடல் உடற்­கூ­றாய்­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. குழந்­தை­யின் தலை­யில் காய­மேற்­பட்­டி­ருந்­த­தாக உடற்­கூ­றாய்வு அறிக்கை குறிப்­பிட்­டது.

இத­னை­ய­டுத்து, உடற்­கூறாய்வு அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் காவல்­துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.