பெங்களூரு: கர்நாடகாவில் பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) பெட்டிக்குள் ஒளிந்து கண்ணாம்பூச்சி விளையாடிய இரு குழந்தைகள் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம், நஞ்சன்கூடு கிராமத்தைச் சேர்ந்த பாக்யா, 12, காவ்யா, 7, என்ற இரு சிறுமிகளும் மற்ற குழந்தைகளுடன் அங்கிருந்த பனிக்கூழ் கடை அருகே கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகள், பனிக்கூழ் பெட்டிக்குள் புகுந்து தங்களை மறைத்துக்கொண்ட நிலையில், எதிர்பாராதவிதமாக பெட்டி பூட்டிக்கொண்டதில் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
பனிக்கூழ் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய இரு குழந்தைகள் பலி
1 mins read
-

