46 நாள்களுக்குப் பிறகு கிருமிப்பரவல் அதிகரிப்பு

46 நாள்களுக்குப் பிறகு கிருமிப்பரவல் அதிகரிப்பு

1 mins read
5e78bb79-1fd7-4cc4-b7e2-4f77604abe3e
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கடந்த 46 நாட்­களில் இல்­லாத அளவு முதல்­மு­றை­யாக தினசரி கொவிட்-19 பாதிப்பு 3,000க்கும் மேல் பதி­வா­னது. 24 மணி நேரத்­தில் 3,303 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் 39 பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் மத்­திய சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

குறிப்­பாக டெல்லி, ஹரி­யானா, உத்­த­ரப்­பி­ர­தே­சம் போன்ற வட மாநி­லங்­களில் தொற்று பாதிப்பு ஏறு­மு­கம் கண்டு வரு­கிறது. டெல்­லி­யில் 1,367, ஹரி­யா­னா­வில் 535, கேர­ளா­வில் 341, உ.பி.யில் 258, மகா­ராஷ்­டிராவில் 186 பேரும் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், கூடு­தல் தடுப்­பூசி போடு­வ­தற்­கான இடை­வெளியை ஒன்­பது மாதங்­களில் இருந்து ஆறு மாதங்­க­ளாக அர­சாங்­கம் குறைக்க உள்­ள­தா­க­வும் அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் கூறி­ன.

டெல்­லி­யில் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தா­லும் மக்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­ட­வில்லை என்று டெல்லி நகர சுகா­தார அமைச்­சர் சத்­யேந்­தர் ஜெயின் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, நாட்­டில் ஆறு முதல் 12 வயது வரை­யி­லான சிறாா்க­ளுக்கு கோவேக்­சின் தடுப்­பூசி போடும் பணி­ நேற்று தொடங்­கி­யது.