வெயிலில் வாடாமல் ஒய்யார ஊர்வலம்; பரவும் காணொளி

வெயிலில் வாடாமல் ஒய்யார ஊர்வலம்; பரவும் காணொளி

1 mins read
7679d021-932c-4319-adb6-0e0e38b2f11f
ஊர்வலக் காணொளியை பல்லாயிரம் பேர் பார்த்து மாறுபட்ட கருத்துகளைப் பின்னூட்டம் இட்டுள்ளனர். படம்: இணையம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் பல இடங்­க­ளி­லும் சுட்­டெ­ரிக்­கும் வெயி­லால் பல­ரும் அவ­திப்­படும் நேரங்­களில் திரு­மண ஊர்­வ­லம் போன்ற நிகழ்ச்­சி­க­ளைப் பல­ரும் பக­லில் தவிர்த்து விடு­வது வழக்­கம்.

கடந்த சில நாள்களில் நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும் வெப்­ப­நிலை அதி­க­மா­கவே பதி­வா­கி­யுள்­ளது. இந்­நி­லை­யில், திரு­மண ஊர்­வ­லம் ஒன்று நக­ரும் பந்­த­லுக்­குக் கீழ் ஒய்­யா­ர­மா­கச் செல்­லும் காணொளி இணை­யத்­தில் பரவி­வரு­கிறது.

இந்­தி­யத் திரு­ம­ணங்­கள் எப்­போ­துமே கொண்­டாட்­டங்­கள் நிறைந்­தவை. 'அடாது மழை பெய்­தா­லும் விடாது காரி­யத்­தைச் செய்­தல்' என்­ப­தற்கு ஏற்ப, பெருந்­தொற்று, பண­வீக்­கம் என எது நடந்­தா­லும் அதற்­கேற்ப மாற்­றிக்­கொண்டு திரு­மண நிகழ்ச்­சி­களும் நடை­பெற்று வரு­கின்­றன.

நக­ரும் பந்­த­லுக்­குக் கீழ் திரு­மண ஊர்­வ­லம் போகும் காணொ­ளியை, 'இந்­தியா கண்­டு­பி­டிப்­பு­க­ளின் பூமி' என்று குறிப்­பிட்டு தேவ­யானி கோஹ்லி என்­ப­வர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார். வழக்­க­மான ஆட்­டம் பாட்­டத்­து­டன் செல்­லும் மண­ம­கன் அழைப்பு ஊர்­வ­லத்­தில் கூடவே நக­ரும் பந்­தல் ஒன்று செல்­கிறது. இது நடை­பெற்ற இடம் பதி­வி­டப்­ப­ட­வில்லை.

இணை­ய­வா­சி­கள் பலர் இதைப் புத்­தாக்க யோசனை என்று கொண்­டா­டி­னா­லும் சிலர் மின் கம்­பி­க­ளைச் சுட்­டிக்­காட்டி இது அபா­யம் விளை­விக்­கக்­கூ­டும் என்­றும் எச்­ச­ரித்­துள்­ள­னர்.