ரியாசி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மர்ஹி எனும் இடத்தில் அமைந்திருக்கும் காட்டுப் பகுதியில் மிகப் பெரிய தீ மூண்டுள்ளது.
தீ வேகமாகப் பரவி வருவதாகவும், ஏற்கெனவே ஏக்கர் கணக்கில் வனப்பகுதி சேதமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. மரங்களும் இதர வனப்பகுதி பொருள்களும் தீயில் கருகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்டதற்கான காரணம் குறித்துத் தெளிவான தகவல் ஏதும் இல்லை.
இதுகுறித்துத் தகவல் அறியவும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

