இந்திய மாணவர்களுக்கு மீண்டும் விசா: சீனா

இந்திய மாணவர்களுக்கு மீண்டும் விசா: சீனா

1 mins read
2934ef50-01b3-4f8f-a10e-c0a5d8510fd8
-

புது­டெல்லி: சீனப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பயி­லும் இந்­திய மாண­வர்­கள் சிலர் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடர்­பில் பெய்­ஜிங் விதித்­தி­ருந்த விசா, விமா­னச் சேவைக் கட்­டுப்­பா­டு­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இரண்டு ஆண்­டு­க­ளா­கக் கல்­வி­யைத் தொடர முடி­யா­மல் தவிக்­கும் இத்­த­கைய மாண­வர்­களில் சில­ருக்கு மீண்­டும் விசா வழங்க முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தா­கச் சீன வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது. கல்­வி­யைத் தொடர சீனா திரும்ப விரும்­பும் இந்­திய மாண­வர்­க­ளின் தவிப்புக்கு உயர் முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­தாக அமைச்­சின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

மற்ற நாடு­களில் இருந்து இதே­போன்று சீனா திரும்­பும் மாண­வர்­க­ளுக்­கான நட­வ­டிக்­கை­கள் குறித்து இந்­தி­யத் தரப்­பி­டம் தக­வல் பகி­ரப்­பட்­ட­தா­கக் கூறிய அவர், உண்­மை­யி­லேயே சீனா திரும்ப ஆர்­வம் கொண்­டுள்ள மாண­வர்­க­ளின் பட்­டி­யலை இந்­தியா வழங்­கி­ய­தும் உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்­றார்.

ஏறக்­கு­றைய 23,000 மாண­வர்­கள் இவ்­வாறு கல்­வி­யைத் தொடர முடி­யா­மல் தவிப்­ப­தா­க­வும் அவர்­களில் பெரும்­பா­லோர் மருத்­துவ மாண­வர்­கள் என்­றும் கூறப்­பட்­டது.