புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து பெயர்ப் பலகைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரதிதாசனின் பிறந்தநாளை ஒட்டி புதுச்சேரி சட்டமன்றத்துக்கு எதிரே உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபின் அவர் உரையாற்றினார்.
தமது உரையில், புதுச்சேரியில் உள்ள தெருக்களின் பெயர்கள், கடைகளின் பெயர்ப் பலகைகள் ஆகியவை தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அது பாரதிதாசனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்றார்.
புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர்ப் பலகை அமைக்கும் பணி குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

