செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
1de259f7-f7e1-409d-bad0-ad75caef22a1
-

புதிய ராணுவத் தளபதி

புதுடெல்லி: லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று இந்தியாவின் புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார். ஜெனரல் பாண்டே முன்பு ராணுவத்தின் துணைத் தலைவராக இருந்தார் ­பிப்ரவரியில் ஓய்வுபெறும் லெப்டினன்ட் ஜெனரல் சிபி மொஹந்திக்கு பதிலாக இவர் பதவி ஏற்றார்.

கொவிட்-19 பரவல் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,688 பேருக்கு கொவிட் கிருமித்தொற்று உறுதியாகி உள்ளது. கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்கள் சுமார் 4,25,33,377, இறந்தவர்கள் 5,23,803 என்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ட்ரோனை சுட்டு வீழ்த்தினர்

பஞ்சாப்: பாகிஸ்தானிலிருந்து இந்தியா நோக்கி வந்த ட்ரோனை பஞ்சாப் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தினா். நேற்று முன்தினம் அதிகாலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 'டிஜேஐ மேட்ரிஸ்-300' ரகத்தைச் சேர்ந்த கறுப்பு நிறத்திலான அந்த ட்ரோனை பிஎஸ்எஃப் வீரா்கள் சுட்டு வீழ்த்தினா்.