பெங்களூரு: தீவிரவாதத்துக்கு எதிரான மத்திய அரசின் கொள்கையில் சமரசம் என்பதே கிடையாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் தேசிய நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்தை தொடங்கி வைத்துப் பேசிய அவர், நாட்டில் நடக்கும் ஆயுதக் கடத்தல், வெடிகுண்டு அச்சுற்றுதல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க தேசிய தரவு மையம் அமைக்கப்படும் என்றார்.
கடந்த காலங்களைவிட தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு சவால்கள் அதிகமாகி உள்ளதாகக் குறிப்பிட்ட அமித்ஷா, இந்த குற்றங்கள் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே விரைவாக பரிமாற்றம் செய்வது அவசியமானது என்றார்.