வளர்ச்சித் திட்டங்களில் லஞ்சம் கேட்காதீர்கள்

2 mins read
adeeda5b-0ee7-4751-ac92-4716e2077cdb
-

புது­டெல்லி: "பொது­மக்­க­ளின் வளர்ச்­சித் திட்­டங்­களில் லஞ்­சமோ கமி­ஷனோ வாங்­கக்­கூ­டாது என பார­திய ஜனதா கட்சி நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு உத்­த­ரப் பிர­தேச முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் (படம்) உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார். இது­போன்ற செயல்­களில் ஈடு­ப­டு­வோர்­மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார். யோகி­யின் இந்த உரை­யைக் கேட்டு அரங்­கி­லி­ருந்த பாஜ­க­வி­னர் அதிர்ச்­சி­ய­டைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

லலித்­பூ­ரில் நடந்த பாஜக கட்­சிக் கூட்­டத்­தில் உரை­யாற்­றும்­போது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். இதில், பாஜ­க­வின் நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் முக்­கிய நிர்­வா­கி­கள் கலந்­து­கொண்­ட­னர். இக்­கூட்­டத்­தில் பேசிய முதல்­வர் யோகி, "கமி­ஷன் எனும் பெய­ரில் நம் எம்.பி, எம்­எல்­ஏக்­கள் லஞ்­சம் பெறு­வதை முத­லில் நிறுத்த வேண்­டும். அப்­போ­து­தான் அதி­கா­ரி­கள் மட்­டத்­தில் நாம் லஞ்­சத்தை ஒழிக்­க­மு­டி­யும். இந்­தத் தக­வல் முத­லில் நம் கட்­சி­யி­னர் இடையே செல்­வது அவ­சி­யம். மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளான உங்­க­ளுக்கு அவர்­க­ளி­டம் லஞ்­சம் கேட்க எந்த உரி­மை­யும் இல்லை," எனத் தெரி­வித்­தார்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தின் சட்­டப்­பே­ரவைத் தேர்­தல் பிர­சா­ரத்­தில் முதல்­வர் யோகி, தனது இரண்­டாம் முறை பத­விக் காலத்­தில் ஊழல் இல்­லாத ஆட்­சியை அமைப்­ப­தாக உறுதி அளித்­தி­ருந்­தார். அதன் வெளிப்­பா­டா­கவே அவ­ரது இந்த உரை இருந்­த­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

முன்­ன­தாக, உத்­த­ரப் பிர­தேச மாநில அர­சின் திட்­டங்­களை அம­லாக்குவதற்கு அம்­மா­நில அர­சின் சில அதி­கா­ரி­கள் லஞ்­சம் கேட்­ப­தாக முதல்­வர் யோகி­யி­டம் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது. இதை­யடுத்து, முதல்­வர் யோகி, முத­லில் புகார் அளிப்­ப­வர்­கள் சரி­யாக இருந்­தால், தாம் அதி­கா­ரி­களைச் சரி­செய்­வ­தா­க­வும் பதி­ல­ளித்­துள்­ள­தா­கத் தெரி­கிறது. இதை­ய­டுத்து, அவர் தனது கருத்தை முதன்­முறை­யாக வெளிப்­ப­டை­யாக மேடை­யி­லும் பேசி­யுள்­ளார். இது­போன்ற புகார்­களைப் பெற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்டி முதல்­வர் யோகி, அமைச்­சர்­கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளார்.

மேலும் அமைச்­சர்­கள், ஐபி­எஸ், ஐஏ­எஸ் மற்­றும் அர­சாங்­கத்­தில் உயர்­மட்­டத்­தில் பணி­பு­ரி­யும் அதி­கா­ரி­கள் தமது மற்­றும் குடும்­பத்­தா­ரின் சொத்து விவ­ரங்­களை தெரி­விக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.

இவற்றை பொது­மக்­களும் காணும் வகை­யில் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யிட உள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.