மாணவியின் பதிலால் நெகிழ்ந்த பிரதமர் மோடி

மாணவியின் பதிலால் நெகிழ்ந்த பிரதமர் மோடி

1 mins read
56dfd23b-9f3c-40a8-bc54-087818639212
-

புதுடெல்லி: குஜராத் மாநில அரசு விழாவில் காணொளி மூலம் கலந்துகொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

மாற்றுத் திறனாளியான பயனாளர் ஒருவரிடம் உரையாடியபோது அவரது மகள்களின் கல்வி விவரங்களைக் கேட்டறிந்தார்.

மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவராக விரும்புவதாக அவர் கூறவே அந்தச் சிறுமியிடமும் பேசினார் திரு மோடி.

மருத்துவத் துறையில் படிக்க விரும்புவது ஏன் என்ற பிரதமரின் கேள்விக்கு பார்வையற்ற தன் தந்தையின் துன்பங்களே காரணம் என்று கண்ணீருடன் கூறினார் மாணவி.

அதைக் கேட்டு நெகிழ்ச்சியுடன் சிறிதுநேரம் அமைதிகாத்த திரு மோடி, இந்தக் கருணைதான் உங்கள் வலிமை என்று பாராட்டியதுடன் சிறுமியின் கனவை நனவாக்க உதவி தேவைப்பட்டால் தாம் செய்யத் தயார் என்று தந்தையிடமும் வாக்களித்தார்.