சட்டமன்ற வாயிலில் காலிஸ்தான் கொடியைக் கட்டிய ஆடவர் கைது

சட்டமன்ற வாயிலில் காலிஸ்தான் கொடியைக் கட்டிய ஆடவர் கைது

1 mins read
8d70d677-a565-4f71-a852-6f3c1c8affed
-

தர்மசாலா: இமாச்சலப் பிரதேச சட்டமன்ற வாயிலில் சென்ற ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் கொடியைக் கட்டியதுடன் வளாகச் சுவர்களில் அந்த இயக்கத்துக்கு ஆதரவான வாசகங்களையும் எழுதிய ஆடவரைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்வீர் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவருடன் சேர்ந்து இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றொருவர் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான சம்பவத்திற்குப் பிறகு, பஞ்சாப்பிற்கும் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் இடையிலான எல்லை மூடப்பட்டதுடன் அந்த மாநிலத்தில் பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.