52 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

52 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

1 mins read
1a8080c1-c8ee-456b-9d03-673c4d190592
234 இடங்களைக் கொண்டது மாநிலங்களவை. படம்: இணையம் -

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த 52 மாநிலங்களவைத் தொகுதிகளில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவற்றில் தலா ஆறு இடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.

எஞ்சிய இடங்கள் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், பீகார், ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன. சென்ற மாதம் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.