புதுடெல்லி: இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகத் திரு ராஜீவ் குமாரை நியமித்துள்ளார்.
தற்போது பொறுப்பில் உள்ள திரு சுசில் சந்திரா இம்மாதம் 14ஆம் தேதி பதவி ஓய்வுபெறுவார்.
அதன் பிறகு, 15ஆம் தேதி திரு ராஜீவ் குமார் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.

