தாதியா: மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் ரதயாத்திரை நடைபெற்றபோது காவலர் ரவி ஷர்மா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அங்கிருந்த ஆறு வயதுச் சிறுவன் அவரிடம் பணம் கேட்கவே ரவி ஷர்மா அவனை விரட்டினார்.
சாப்பாடு வாங்கப் பணம் கொடுக்கும்படி சிறுவன் தொடர்ந்து நச்சரிக்கவே கோபமடைந்த காவலர் அவனைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்பட்டது. பணி முடிந்த பின்னர் குவாலியர் நகருக்குச் சென்று சிறுவனின் உடலை அவர் வீசியதாகத் தெரிகிறது. தான் மன உளைச்சலில் இருந்தபோது சிறுவன் தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் அவ்வாறு செய்ததாக காவலர் ரவி ஷர்மா விசாரணையில் கூறினார்.

