வெயிலில் மயங்கி விழும் பறவைகள்

1 mins read
dac1ded3-00d3-4cd0-a287-e8490bf57c90
-

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கடுமையான வெப்பத்தின் தாக்கத்தால் பறவைகள் மயங்கி விழும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக விலங்கியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வடமேற்கு, மத்திய மாநிலங்களில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சென்ற மாதம் அதிக வெப்பம் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் கூறியது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இந்த மாதமும் கடுமையான வெப்பம் தொடர்கிறது.

கடந்த சில வாரங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகளுக்கு வெப்ப அலை பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் புறாக்களும் கிளிகளும் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் விலங்கியல் மருத்துவர்கள் தெரிவித்தனர்.