தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கருநாகம் குவளையிலிருந்து நீர் உறிஞ்சும் காட்சி (காணொளி)

1 mins read
8c923c4e-fc2a-4358-9610-5e2671987d69
படம்: டுவீட்டர் -

கருநாகம் ஒன்று கண்ணாடி குவளையிலிருந்து தண்ணீர் உறிஞ்சும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆடவர் ஒருவர் குவளையைப் பிடித்துக்கொண்டிருக்க, அதிலிருந்து நாகம் நீரை உறிஞ்சுகிறது.

பாம்புகள் வாயைத் திறந்து தண்ணீர் குடிப்பதில்லை. மூக்கு துவாரம் வழியாக அவை தாகத்தைத் தணித்துகொள்கின்றன.

இந்தக் காணொளி சென்ற ஆகஸ்ட் மாதம் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால், இந்தப் பதிவு மீண்டும் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

கடும் வெயிலில் தண்ணீர் குடித்து உடல் வெப்பத்தைத் தணித்துகொள்வது அனைத்து உயிரினங்களுக்கும் இயல்புதான். ஆனால் கொடிய வி‌ஷம் உள்ள கருநாகம் ஒரு குவளையிலிருந்து நீர் குடிப்பது அதிர்ச்சியளிக்கிறது

உலகில் மிக நச்சுள்ள பாம்பு நாகமாகும். இது சுமார் 4 மீட்டர் வரை வளரக்கூடியது.

நாகங்கள் பொதுவாக தென்கிழக்காசியாவில் காணப்படுகின்றன. குறிப்பாக கருநாகங்கள் அல்லது இராஜநாகங்கள் இந்தியாவில் பரவலாக காணப்படுகின்றன.