புதுடெல்லியில் தீ, குறைந்தது 27 பேர் பலி

புதுடெல்லியில் தீ, குறைந்தது 27 பேர் பலி

1 mins read
e14e0859-2adf-4885-9f89-5cd5f24c77cf
புதுடெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள வர்த்தகக் கட்டடத்தில் தீ மூண்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் தீ மூண்டதால் குறைந்தது 27 மாண்டனர்.

மேலும் பலர் காயமடைந்தனர்.

தீக்காயங்கள் ஏற்பட்ட 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமையன்று (13 மே) நிகழ்ந்தது.

தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் தேடல் பணிகள் தொடர்வதாகவும் தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தீ மூண்டதற்கான காரணம் தற்போது தெரியவில்லை.