புதுடெல்லி: வாரயிறுதி நாள்களில் டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் வெப்ப அலை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லியில் வெப்பநிலை 40-47 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

