'இந்தியப் பொருளாதாரம் கவலைக்குரிய நிலையில் உள்ளது'

'இந்தியப் பொருளாதாரம் கவலைக்குரிய நிலையில் உள்ளது'

1 mins read
7e6c8418-e502-4b13-be94-6eee64949994
-

உதய்­பூர்: இந்­தி­யா­வின் பொரு­ளா­தா­ரம் மிக­வும் கவ­லைக்­கு­ரிய நிலை­யில் உள்­ள­தாக காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர் ப.சிதம்­பரம் கூறி­யுள்­ளார்.

கட்­சி­யைப் பலப்­ப­டுத்­து­வது குறித்து விவா­திக்­கும் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திற்குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ப.சிதம்­ப­ரம், "இந்­தி­யப் பொரு­ளா­தாரம் மிக­வும் கவ­லைக்­கு­ரிய நிலை­யில் உள்­ளது.

"மாநி­லங்­க­ளின் நிதி நிலை முன்­னெப்­போ­தும் இல்­லாத வகை­யில் மோச­மாக உள்­ளது. பெருந்­தொற்­றுக்­குப் பிந்­தைய மீட்­சி­யா­னது சிறப்­பா­ன­தாக இல்லை.

"நாட்­டின் பண­வீக்­கம் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத அள­வுக்கு உயர்ந்துள்­ளது.

"அர­சின் தவ­றான கொள்­கை­கள், பண­வீக்­கத்தை மேலும் அதி­க­ரிக்­கச் செய்­கின்றன.

"உலக நாடு­களில் நில­வும் சூழ­லும் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்­திற்கு மேலும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­உள்­ளது. இந்த நீட்­சி­களை எப்­படி கையாள்­வது என்று தெரி­யா­மல் அரசு திண்­டா­டு­கிறது.

"உல­க­ளா­விய, உள்­நாட்டு நிலை­மை­க­ளைக் கருத்­தில் கொண்டு பொரு­ளா­தா­ரக் கொள்­கை­களை மீட்­ட­மைப்­பது அவ­சி­ய­மா­னது," என்­றார்.

இதற்­கி­டையே, கொள்கை முடக்­கம், மோச­டி­க­ளால் காங்­கி­ரசின் 10 ஆண்டு ஆட்­சிக் காலத்­தில் இந்­தி­யா­வின் வளர்ச்சி முடங்­கி­ய­தாக இந்­தி­யப் பிர­த­மர் மோடி குறிப்­பிட்­டார்.

இந்­தூ­ரில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் காணொளி வாயி­லா­கக் கலந்­து­கொண்டு பேசிய அவர் காங்­கி­ர­சைப் பற்றி இவ்வாறு சாடி­னார்.