பஞ்சாப் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; உயிரிழப்பு இல்லை

பஞ்சாப் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; உயிரிழப்பு இல்லை

1 mins read
609b705d-1fdd-43da-a6d6-45641e3fa59e
-

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனை யில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. புறநோயாளிகள் பிரிவிலிருந்த மின்மாற்றிகளில் உள்ள எண்ணெய் டேங்குகளில் முதலில் தீப்பற்றியது.

அவை வெடித்ததில் அருகில் உள்ள மருத்துவமனை கட்டடத்திலும் தீப்பற்றி. அப்பகுதி முழுவதும் கரும்புகை ‌சூழ்ந்தது. நோயாளிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக மின்மாற்றியில் இருந்த

எண்ணெய் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

படம்: இணையம்