தப்பிக்க முயன்றவரை காவல்துறை சுட்டுப் பிடித்தது

தப்பிக்க முயன்றவரை காவல்துறை சுட்டுப் பிடித்தது

1 mins read
d79e011b-ec1c-4aca-806b-5adc6b83712e
இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறி, தப்பி ஓட முயன்றவரைக் காவல் துறையினர் துப்பாக்கி யால் சுட்டுப் பிடித்தனர். நாகே‌ஷ் எனும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.படம்: இணையம் -

பெங்­க­ளுர்: கர்­நா­டகா மாநி­லம் பெங்­க­ளூ­ரு­வில் காத­லிக்க மறுத்த இளம்­பெண் மீது அமி­லம் வீசிய வழக்­கில் கைதான இளை­யர் தப்­பி­யோட முயன்­ற­போது, காவல்­து­றை­யி­னர் அவ­ரைச் சுட்­டுப்­பி­டித்­த­னர்.

நிதி நிறு­வ­னத்­தில் வேலை செய்து வந்த 25 வயது இளம்­பெண்ணை, நாகேஷ் என்­ப­வர் ஒரு­த­லை­யாக காத­லித்து வந்­துள்­ளார்.

நாகே­ஷின் காதலை இளம்­பெண் ஏற்க மறுத்­து­விட்ட நிலை­யில், அவர்­மீது அமி­லம் வீசிய நாகேஷ், தமி­ழ­கத்­திற்­குத் தப்பி வந்து திரு­வண்­ணா­ம­லை­யில் சாமி­யார் வேடத்­தில் தனி­யார் ஆசி­ர­மத்­தில் பதுங்­கி­யி­ருந்­ததை அறிந்த போலி­சார், அவ­ரைக் கைது செய்­த­னர்.

பெங்­க­ளூ­ரு­வுக்கு அழைத்துச் செல்­லும் வழி­யில் இயற்கை உபாதை கழிக்க வேண்­டும் எனக் கூறி வேனில் இருந்து இறங்­கிய நாகேஷ், தப்­பி­யோட முயற்­சித்­தி­ருக்­கி­றார்.

அப்­போது, வானை நோக்கி சுட்டு எச்­ச­ரித்த காவல்­து­றை­யி­னர்­மீது அவர் கல்லை வீசி தாக்­கி­னார். அதன் பிறகு காவல்­து­றை­யி­னர் அவ­ரைத் துப்­பாக்­கி­யால் சுட்­டுப்­பி­டித்­த­னர்.

தற்­போது காலில் குண்டு அடி­பட்டு நாகேஷ் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.