ஹனோய்: நீச்சலில் நேற்று சிங்கப்பூரின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கு தங்கம் கிடைத்தது.
சிங்கப்பூர் வீராங்கனை கான் சிங் ஹுவீ தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியின் 800 மீட்டர் எதேச்சை பாணி பெண்கள் நீச்சலில் தனது வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டார். 8 நிமிடம் 42.60 விநாடிகளில் நீந்தி முதலாவதாக வந்தார்.
இதே போட்டியில் சிங்கப்பூருக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது. ஆஷ்லே லிம் 8 நிமிடம் 58.98 விநாடிகள் நீந்தி மூன்றாவதாக வந்தார்.
இரண்டாம் இடம் வியட்னாமின் மை டியென் வோ திக்குக் கிடைத்தது.
ஆண்கள் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் சிங்கப்பூரின் குவா ஸெங் வென் தங்கம் வென்றார். 49.57 விநாடிகளில் அவர் வெற்றி இலக்கை எட்டினார். வியட்னாமின் ஜெரமீ லேய்க் நினோ லுவோங் இரண்டாவதாக வந்தார்.

